Friday, July 7, 2017

பிரானைப் பிரிந்து, பிராட்டி படும் பாடு!

சுந்தர காண்டம், காட்சிப் படலம்


 - அசோக வனத்தில் சீதை இருந்த நிலை




இந்தப் பாடலில் கம்பர் மிக அழகாக, இனிமையாக, அடுக்கு-அடுக்காக, தன் தலைவனான இராம பிரானைப் பிரிந்த சீதாப் பிராட்டி ஒரு அரக்கனிடமும் அவனைச் சுற்றியிருக்கும் அரக்கியர்களிடமும் அகப்பட்டுப்படும் இன்னல்களை கூறுகிறார்!


விழுதல், விம்முதல் , மெய் உற வெதும்புதல்,வெருவல்,

எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்

தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்

அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்’


ஏக்கம், விரப தாபம், அச்சம், ...

பொருள்:

விழுதல் -பூமியில் விழுதல்; 
விம்முதல் - தேம்பி அழுதல்; 
உறமெய் வெதும்புதல்  -  அதிகமாக உடல் வெப்பம் அடைதல்; 
வெருவல்அஞ்சுதல்; 
எழுதல் - எழுந்திருத்தல்; 
ஏங்குதல்,  இரங்குதல்வருந்துதல், அழுதல்; 
இராமனை எண்ணித் தொழுதல் - இராமபிரானை நினைந்து வணங்குதல்; 
சோருதல் - தளர்ச்சியடைதல்; 
துளங்குதல் - உடல் நடுக்கம் அடைதல்; 
துயர் உழந்து உயிர்த்தல் - துன்பத்தால் சிதைந்து பெருமூச்சுவிடுதல்; 
அழுதல் - புலம்புதல்; 
அன்றி - ஆகிய இச்செயலைத் தவிர; 
அயல் ஒன்றும் - வேறு செயல்கள் எதுவும்; 
செய்குவது அறியாள் - செய்வது அறியாதவளாக இருந்தாள்.


இப்பாடலில் சீதாப்பிராட்டியின் நிலை மிகவும் வருத்தத்திற்குறியதாகத் தோன்றினாலும்... அன்னை அவர்கள் அசோக வனத்தில் தனியாக அரக்கியர்களுக்கிடையில் தன் தலைவன் தன்னை கண்டிப்பாக வந்து மீட்ப்பான் என்ற எண்ணம் தளராமல் இருந்ததற்கு இராவணன் தன்னை நோக்கி தகாத பல மொழிகளை கூறிய பொழுது, அவனைத் துரும்பாகக் நினத்து நிந்தித்ததை 'நிந்தனைப்' படலத்தில் காணலாம்.  ஆகையால் சீதாப்பிரட்டி மேற்கூறியவாறு மனம் வருந்தினாலும், மனம் தளரவில்லை என்பது உண்மை!


No comments:

Post a Comment