சுந்தர காண்டம், காட்சிப் படலம்
1. மனதில் அனுமன் நினைத்தல்
அனுமன் இலங்கை முழுவதும் சீதா பிராட்டியைத் தேடி, முடிவாக அசோக வனத்திற்க்கு வருகிறார். இராவணன் தான் சீதாப் பிராட்டியை அபகரித்து தூக்கிக்கொண்டு வந்தது முடிவாக உண்மை என்று பல நிகழ்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது!
அனுமன் அசோக வனத்திற்கு அருகில் வரும்பொழுது இவ்வண்ணம் நினைத்து செயல்படுகிறார்:
- இந்தச் சோலையில் சீதா பிராட்டியைக் காண்பேனானால் என்னுடைய துன்பங்கள் நீங்கிவிடும்!
- இல்லையெனில், இலங்கையை அழித்து முடிவில் என்னை நானே மாய்த்து உயிர் நீர்ப்பதைத் தவிர மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
இந்தச் சிந்தனைகள் இராவணன் தான் சீதையை பலாத்காரமாக அவளின் விருப்பத்திற்கு எதிராக கடத்தி வந்தான் என்பதாலும், அனுமன் இலங்கை முழுவதும் தேடி தோல்வியுற்றதாலும் நியாயமானது !
எடுத்த செயல் செவ்வனே முடியும் என்று எதிர்பார்க்க வேண்டும். இருப்பினும், அச்செயல் நாம் எண்ணிய படி முடியாவிட்டால், என்ன செய்வது என்று முன்னரே முடிவு செய்ய வேண்டும்.
பாடல்:
மாடு நின்ற அம் மணிமலர்ச் சோலையை மருவித்
‘தேடி அவ் வழிக் காண்பெனேல் தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென் என்னில், பின் உரியது ஒன்று இல்லை!
வீடுவேன், மற்று, இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி!
பக்கத்தில் நிமிர்ந்துள்ள அழகிய மலர்ச்சோலையை அடைந்து அவ்விடத்தில் தேடிப் பிராட்டியை பார்ப்பேனானல், என்னுடைய துன்பம் நீங்கும். சோலையின் உள்ளே காணப் பெற்றிலேன் என்றால் பிறகு திரிகூட மலையில் உள்ள இந்த இலங்கை மா நகரை பாழாக்கி யான் இறப்பேன். செய்வதற்க்கு உரிய செயல் வேறு ஒன்றும் கிடையாது! - நன்றி.
- If I find my Lord's Consort in this beautiful garden, then, all my trials and tribulations are solved.
- Else, there is nothing to be done other than destroying this Lanka and sacrificing myself [He does not want to face his leader - sugreevan w/a negative result/status]
No comments:
Post a Comment