Friday, July 7, 2017

பிரானைப் பிரிந்து, பிராட்டி படும் பாடு!

சுந்தர காண்டம், காட்சிப் படலம்


 - அசோக வனத்தில் சீதை இருந்த நிலை




இந்தப் பாடலில் கம்பர் மிக அழகாக, இனிமையாக, அடுக்கு-அடுக்காக, தன் தலைவனான இராம பிரானைப் பிரிந்த சீதாப் பிராட்டி ஒரு அரக்கனிடமும் அவனைச் சுற்றியிருக்கும் அரக்கியர்களிடமும் அகப்பட்டுப்படும் இன்னல்களை கூறுகிறார்!


விழுதல், விம்முதல் , மெய் உற வெதும்புதல்,வெருவல்,

எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்

தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்

அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்’


ஏக்கம், விரப தாபம், அச்சம், ...

பொருள்:

விழுதல் -பூமியில் விழுதல்; 
விம்முதல் - தேம்பி அழுதல்; 
உறமெய் வெதும்புதல்  -  அதிகமாக உடல் வெப்பம் அடைதல்; 
வெருவல்அஞ்சுதல்; 
எழுதல் - எழுந்திருத்தல்; 
ஏங்குதல்,  இரங்குதல்வருந்துதல், அழுதல்; 
இராமனை எண்ணித் தொழுதல் - இராமபிரானை நினைந்து வணங்குதல்; 
சோருதல் - தளர்ச்சியடைதல்; 
துளங்குதல் - உடல் நடுக்கம் அடைதல்; 
துயர் உழந்து உயிர்த்தல் - துன்பத்தால் சிதைந்து பெருமூச்சுவிடுதல்; 
அழுதல் - புலம்புதல்; 
அன்றி - ஆகிய இச்செயலைத் தவிர; 
அயல் ஒன்றும் - வேறு செயல்கள் எதுவும்; 
செய்குவது அறியாள் - செய்வது அறியாதவளாக இருந்தாள்.


இப்பாடலில் சீதாப்பிராட்டியின் நிலை மிகவும் வருத்தத்திற்குறியதாகத் தோன்றினாலும்... அன்னை அவர்கள் அசோக வனத்தில் தனியாக அரக்கியர்களுக்கிடையில் தன் தலைவன் தன்னை கண்டிப்பாக வந்து மீட்ப்பான் என்ற எண்ணம் தளராமல் இருந்ததற்கு இராவணன் தன்னை நோக்கி தகாத பல மொழிகளை கூறிய பொழுது, அவனைத் துரும்பாகக் நினத்து நிந்தித்ததை 'நிந்தனைப்' படலத்தில் காணலாம்.  ஆகையால் சீதாப்பிரட்டி மேற்கூறியவாறு மனம் வருந்தினாலும், மனம் தளரவில்லை என்பது உண்மை!


Wednesday, July 5, 2017

கம்பர் காட்டும் திட்டமிட்டு ஒரு செயலை அணுகும் முறை!

சுந்தர காண்டம், காட்சிப் படலம்

1. மனதில் அனுமன் நினைத்தல் 



அனுமன் இலங்கை முழுவதும் சீதா பிராட்டியைத் தேடி, முடிவாக அசோக வனத்திற்க்கு வருகிறார். இராவணன் தான் சீதாப் பிராட்டியை அபகரித்து தூக்கிக்கொண்டு வந்தது முடிவாக உண்மை என்று பல நிகழ்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது!

அனுமன் அசோக வனத்திற்கு அருகில் வரும்பொழுது இவ்வண்ணம் நினைத்து செயல்படுகிறார்:
  • இந்தச் சோலையில் சீதா பிராட்டியைக்  காண்பேனானால் என்னுடைய துன்பங்கள்  நீங்கிவிடும்!
  • இல்லையெனில், இலங்கையை அழித்து முடிவில் என்னை நானே மாய்த்து உயிர் நீர்ப்பதைத்   தவிர மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. 
இந்தச்  சிந்தனைகள் இராவணன் தான்  சீதையை பலாத்காரமாக அவளின் விருப்பத்திற்கு எதிராக கடத்தி வந்தான் என்பதாலும், அனுமன் இலங்கை முழுவதும் தேடி தோல்வியுற்றதாலும்  நியாயமானது !

எடுத்த செயல் செவ்வனே முடியும் என்று எதிர்பார்க்க வேண்டும். இருப்பினும், அச்செயல் நாம் எண்ணிய படி முடியாவிட்டால், என்ன செய்வது என்று முன்னரே முடிவு செய்ய வேண்டும்.

பாடல்:
மாடு நின்ற அம் மணிமலர்ச் சோலையை மருவித்
‘தேடி அவ் வழிக் காண்பெனேல் தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென் என்னில், பின் உரியது ஒன்று இல்லை!
வீடுவேன், மற்று, இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி! 

பக்கத்தில் நிமிர்ந்துள்ள அழகிய மலர்ச்சோலையை அடைந்து அவ்விடத்தில் தேடிப் பிராட்டியை பார்ப்பேனானல், என்னுடைய துன்பம் நீங்கும்.  சோலையின் உள்ளே காணப் பெற்றிலேன் என்றால் பிறகு திரிகூட மலையில் உள்ள இந்த இலங்கை மா நகரை பாழாக்கி யான் இறப்பேன். செய்வதற்க்கு உரிய செயல் வேறு ஒன்றும்  கிடையாது! - நன்றி.

  • If I find my Lord's Consort in this beautiful garden, then, all my trials and tribulations are solved.
  • Else, there is nothing to be done other than destroying this Lanka and sacrificing myself [He does not want to face his leader - sugreevan w/a negative result/status]
This line of thought is justified by the fact that RaavaNan has abducted Sita Devi (based on prior incidents and evidences) and Hanumaan has searched Lanka completely. The fact that he has such a contingency plan implies that he is somewhat confident & positive that he will find Sita Devi here, at the Asoka VaNam. 

Hope for the Best and Prepare for the Worst!